jump to navigation

சங்கராபரணம்‍‍‍‍‍ ‍‍* மால‌தி மைத்ரி பிப்ரவரி 27, 2008

Posted by varnajaalam in படித்தது.
Tags: ,
add a comment

படித்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் எழுதுகிறேன்.

Advertisements

தோஷம் பிப்ரவரி 27, 2008

Posted by varnajaalam in கவிதைகள், புதியது.
Tags: , ,
add a comment

தோஷம் 

சர்ப்பம் நெளியும்
ஊர்ந்து முகம் உரசும்
க‌ன‌வில்
தொட‌ர்பின்றி துர‌த்தும்
வால்க‌ளின் இடுக்கில்
புர‌ளும் நீண்ட‌ முடிக்க‌ற்றை
தேக‌ம் மின்ன‌
வ‌ரி வ‌ரியாய் வ‌ன‌ப்பாய்
கால்க‌ள் த‌ழுவி
விர‌லிடுக்கில் உற‌க்கம்
செந்தீ முனை நாக்கு
திசை தேடிய‌ ப‌ய‌ண‌த்தில்
என்னிதழ் ப‌ற்றி
உமிழ் நீர் ப‌ருகிய‌
கீற‌லும் உரிந்த‌ ப‌ச்சை
தோல் மிச்ச‌மும்
விடிந்த பின் சொன்னாள்
நீண்டு வ‌ளைந்த‌ காத‌ணி
தொலைந்து போயிற்றென்று

உனக்கானவை பிப்ரவரி 24, 2008

Posted by varnajaalam in கவிதைகள், புதியது.
Tags: , , , , ,
add a comment

உனக்கானவை 

 நீண்ட இடைவெளியை கடந்து
கவிதை எழுதுகிறேன்.
மொழியில் சரளம்
சற்றே பிடிபட மறுக்கிற‌து
வார்த்தைகள் தொண்டையில்
சிக்கிக் கொண்ட முள்ளாய்
முரண்டு பிடிக்கிறது
எதுகையும் மோனையும்
எதிரெதிரே ப‌யணிக்கின்ற‌ன‌.
ச‌ந்திப் பிழைக‌ளும்
ச‌ந்த‌ப் பிழைக‌ளும்
ச‌க‌ஜ‌மாகி விட்டன
இல‌க்க‌ண‌ம் சேராத
வரிக‌ள் என்றாலும்
அழ‌காய் இருக்கிற‌து
உன்னை ப‌ற்றிய‌
க‌விதை

பனிக்காலம் நவம்பர் 30, 2007

Posted by varnajaalam in கவிதைகள், புதியது.
add a comment

dark.jpg

பின்னிரவின் வாடைக்காற்று
மெல்ல பின் வாங்கும்
இடைவிடாது நாய்கள் குரைக்கும்
நடு வீதியை தாண்டி
விசுவாசமாய் தொடரும்
மங்கிய நிலா வெளிச்சத்தில்
உன் வீடு
அழகாய் இருக்க்கிறது

கடற்கரை நவம்பர் 30, 2007

Posted by varnajaalam in கவிதைகள்.
Tags:
add a comment

boat.jpg

இது எந்தனையாவது முறையென்று
தெரியவில்லை
இப்படி கடற்கரையில் அமர்ந்து
அலைகளை கணக்கெடுப்பது
சின்னதும் பெரிதுமாக
ஒழுங்கற்று வந்து
எதையோ தேடித் தேடி
களைத்துப் போகின்றன
என்னைப் போலவே
வேண்டியதன் இடம்
தெரியாதெனினும்

மாநகர பேருந்து – ஹைக்கூ ஜூலை 21, 2007

Posted by varnajaalam in கவிதைகள்.
add a comment

மாநகர பேருந்துpatient_bus.jpg

 ————————————————–

பேருந்து நிருத்தத்தில் இறங்கிய

 என் உதடுகளிள்

ஒட்டிக் கொண்டது உன் புன்னகை

 ————————————————–

பேருந்து டிக்கெட்டுடன்

இலவசமக

சில்லறைகான வசவும் 

 ————————————————–

மாநகர பேருந்து

சிக்கி திணறிய

காற்று  

 ————————————————–

வியர்வை நாற்றம், பவுடர் வாசத்துடன்

பேருந்தில் பயணிக்கின்ற

வாசனையற்ற மனிதர்களும

 ————————————————–

சர்தார்ஜியும் ஆங்கிலமும் ஜூலை 21, 2007

Posted by varnajaalam in சிரிப்புகள்.
1 comment so far

ஒரு நாள் மாலை கடற்கரையில் சர்தார்ஜி ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் சர்தார்ஜியை பார்த்து ஆர் யு ரிலாக்சிங் ?(Are you relaxing ?) என்று கேட்டார். உடனே சர்தார்ஜி நோ ம் மகேந்தர் சிங் (No, i’m mahendhar Singh) என்றார்.

பிறகு சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற மற்றொருவர் சர்தார்ஜியை பார்த்து ஆர் யு ரிலாக்சிங் ? என்றார். கடுப்பான சர்தார்ஜி நோ ம் மகேந்தர் சிங் என்றார் மீண்டும் . பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த சர்தர்ஜி நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒருவரை பார்த்த சர்தார்ஜி அவரிடம் சென்று ஆர் யு ரிலாக்சிங் ? என்று கேட்டார். உடனே அவர் யெஸ் என்றார்.

 

உடனே சதார்ஜி அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு சொன்னார்,உன்னை எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! “ என்றார்.